தமிழக போக்குவரத்து காவலர்களும் -லஞ்சமும்




வணக்கம் , நானும் என் நண்பனும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொழுது ஒரு போக்குவரத்து காவலர் வாகனத்தை நிறுத்தினார் நானும் என் நண்பனும் இறங்கி என்ன சார் என்று கேட்டோம் அதற்கு அவர் உங்கள் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் காட்டுங்க என்றார் நானும் காண்பித்தேன் உடனே அவர் ஓகே என்ன வண்டியில கண்ணாடி இல்ல என்றார் பின்னர் ஏன் நம்பர் ஸ்டைல் இருக்கு என்று கேட்டார் பின்னர் கேஸ் எழுதனும் என்றார் சார் நாங்க படிக்கறோம் என்றோம் அதற்க்கு அவர் ஓகே ரூ 200 கேட்டார் நான் என்னிடம் ரூ(50) தான் இருக்கு என்றேன் அதற்க்கு அவர் ஓகே ஒரு அரை லிட்டர் பெப்சி வாங்கி குடுத்துவிட்டு போ என்றார் உடனே என் நண்பன் சென்று வாங்கி வந்தான் உடனே அந்த போலீஸ் காரன் (இனிமேல் மரியாதை எதற்கு ) அவன் சரி போங்க இது உங்களுக்கு ஒரு பாடம் என்றான் . அவன் குடிக்கும் அந்த அரை லிட்டர் பெப்சி தான் எங்களுக்கு பாடமா எல்லாம் சரியாய் இருந்தும் இந்த போலீஸ் காரன் தேவையில்லாத காரணங்கள் சொல்லி இப்படி செய்வது சரியா நல்லவேலை அவன் ஒரு கோட்டார் வாங்கி தா என்று கேட்கவில்லை அது வரை சந்தோசம் . ஆனால் விரைவில் கால்கிலோ பருப்பு , [10] கிலோ அரிசி (10] முட்டை கேட்டாலும் கேட்கலாம் அதனால் நீங்க உங்க வண்டியில் பெப்சி , அரிசி , பருப்பு , வாங்கி செல்லவும். இப்படிக்கு சரணம் ........... தொடரும் ..

0 comments:

Post a Comment